ரஜினியின் புதிய படத்தின் பெயர் பேட்ட!

செப்டம்பர் 08, 2018 474

சென்னை (08 செப் 2018): கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படத்திற்கு ’ பேட்ட ‘என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

காலா, 2.0 படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, ராம்தாஸ், ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதத்தில் டேராடூனில் படப்பிடிப்பு தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற உள்ள நிலையில், அதற்காக ரஜினிகாந்த் அங்கு நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 165-வது படமாக உருவாகி வரும் இந்த படத்துக்கு ’பேட்ட’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...