பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் மரணம்!

செப்டம்பர் 09, 2018 1216

கோவை (09 செப் 2018): பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் (74) உடல் நலக்குறைவால் காலமானார்.

கோவை செந்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு கை ஓசை, இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிரரோ, என் ரத்தத்தின் ரத்தமே, பவுனு பவுனுதான், அவசர போலீஸ் 100, படையப்பா, கோவா உட்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். உடல்நல குறைவால் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல் கோவையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இயக்குநர் பாக்யராஜின் ஆஸ்தான நடிகராகவும் கோவை செந்தில் பெயர் பெற்றுள்ளார். இதை பலமுறை இயக்குநர் பாக்யராஜ் மேடைகளில் கூறியுள்ளார். இவரது மரணம் திரைத்துறையினரையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவரும் இயக்குநர் பாக்கியராஜும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறுவேடங்களேனும் கொடுத்து உதவி வந்தார்.

நடிகர் கோவை செந்தில் மரணத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...