காவி அரசியலை பேசும் ரஜினியின் புதிய படம்!

September 09, 2018

சென்னை (09 செப் 2018): ரஜினியின் புதிய படமான 'பேட்ட' காவி அரசியலை பேசுவதாக தகவல் கசிந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.. இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசை அனிருத்.

இதன் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் வேலையில் இப்படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது.

சமீபத்தில் வெளியான கபாலி, காலா என இரண்டு படங்களிலும் இயக்குனர் ரஞ்சித் மூலமாக ரஜினி இடதுசாரி அரசியல் பேசி இருந்தார். கருப்பு உடை, அம்பேத்கார், பெரியார் என்று இடதுசாரிகள் அரசியல் நேரடியாகவும், பல்வேறு குறியீடுகள் மூலமும் வெளிப்படுத்தினர். இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படத்துக்கும் பாஜக தரப்பில் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது பேட்ட படத்தில் காவி உடையில் வலம் வருகிறார். எனவே இந்த படம் காவி அரசியலை ஆதரித்து பேசவுள்ளதாக கருத்து நிலவுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!