நிச்சயிக்கப் பட்ட திருமணத்தை திடீரென நிறுத்திய பிரபல நடிகை!

செப்டம்பர் 10, 2018 767

பெங்களூரு (10 செப் 2018): பிரபல கன்னட நடிகை ராஷ்மிகா அவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை திடீரென நிறுத்தியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் `கீதா கோவிந்தம்' படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் ஹிட்டாகி அவருக்குப் பெரிய அளவில் புகழைத் தேடித்தந்தது. மேலும், இவர் கன்னடத்தில் அஞ்சனி புத்ரா, ஜமக், கிரிக் பார்ட்டி ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கன்னடத்தில் நடித்த போது இவருக்கு கிடைக்காத புகழ் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கிடைத்தது. அதனால் அவருக்குப் பல படவாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தப் படத்தில் அவர் ஹீரோவுடன் மிக நெருக்கமாக நடித்திருந்தார்.

இதனிடையே 2016-ம் ஆண்டு ராஷ்மிகா நடித்திருந்த கிரிக் பார்ட்டி பட ஹீரோ ராக்‌ஷித் செட்டியை அவர் காதலித்து வந்தார். இந்த ஜோடி கன்னடத்தில் பிரபலமான காதல் ஜோடியாகவும் பேசப்பட்டது. அதே நேரத்தில் ராஷ்மிகா- ராக்‌ஷித் நடித்த கிரிக் பார்ட்டி படம் வெளியாகி நல்ல வசூலைக்குவித்தது.

இதைத்தொடர்ந்து ராஷ்மிகா- ராக்‌ஷித் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு பெங்களூரில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நடிகை ராஷ்மிகா மற்ற ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்கலாமா என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

கருத்துவேறுபாடு காரணமாக ராக்‌ஷித் - ராஷ்மிகா இருவரும் பிரிந்துவிட்டதாகவும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் செய்தி வெளியானது. அது உண்மைதான் என்று தற்போது தெரிய வந்துள்ளது. கீதா கோவிந்தம் படத்தைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகாவுக்கு கன்னடம் மற்றும் தெலுங்கில் நிறைய படவாய்ப்புகள் வருவதால் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும், தற்போது திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதால் நிச்சயதார்த்தத்தை முறித்துவிட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ராஷ்மிகா அடுத்து தேவதாஸ், எஜமானா, வ்ரித்ரா ஆகிய கன்னடப் படங்களிலும், டியர் காம்ரேட் என்ற தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...