அதுக்கு அவர் தயாரில்லை - நடிகை சமந்தா பகீர் கருத்து!

செப்டம்பர் 14, 2018 624

ஐதராபாத் (13 செப் 2018): குழந்தை பெற்றுக் கொள்ள நான் தயார் ஆனால் கணவர் தயாரில்லை என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. எனினும் இருவரும் சினிமாவில் பிசியாக உள்ளனர். நாக சைதன்யா தெலுங்கு படங்களிலும் சமந்தா தெலுங்கு தவிர தமிழ் உள்ளிட்ட படங்களிலும் பிசியாக உள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்து இதுவரை குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா? என இருவரிடமும் அவரது நல விரும்பிகள் கேட்டு வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை சமந்தா, இருவரும் பிசியாக இருக்கிறோம் எனினும் நான் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன், ஆனால் என் கணவர் அதற்கு தயாரில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...