சாமி 2- சினிமா விமர்சனம்!

September 21, 2018

சாமி 1 திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி சாமி ஸ்கொயருக்கு அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

சாமி முதல் பாகத்தில் பெருமாள் பிச்சை கொல்வதோடு படம் ஆரம்பிக்கின்றது. அதை தொடர்ந்து 28 வருடங்களுக்கு பிறகு அவருடைய மகன் ராம் சாமி(விக்ரம்) டெல்லியில் ஐ ஏ எஸ் படிக்கின்றார்.

அந்த இடைப்பட்ட கேப்பில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சை(பாபி சிம்ஹா) திருநெல்வேலியை தன் கண்ட் ரோலுக்கு கொண்டு வருகின்றார். ஆனால் அப்பா இரத்தம் தானே மகனுக்கு ஓடுகிறது அல்லவா, அதனால் ஐ ஏ எஸ் விட்டு ஐபிஎஸ் எடுக்கின்றார். பிறகு என்ன திருநெல்வேலி சென்று ராம் சாமி எப்படி ராவண பிச்சையை வேட்டையாடுகின்றார் என்பதே மீதிக்கதை.

விக்ரம் நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக காத்திருக்கின்றார். அந்த வெற்றி சாமி-2வில் அவருக்கு கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம், அதற்கான வேலைகளை அவர் முடிந்த அளவு செய்தும் உள்ளார். ஆறுச்சாமி மகன் ராம் சாமி கேட்க கொஞ்சம் காமெடியாக இருந்தாலும் கதையோடு ஹரி எப்படியோ கோர்த்து கொண்டு வந்துவிட்டார். அதிலும் அப்பாவை போல் ஒருசாமி, இரண்டு சாமி வசனம் பேசும் போது தியேட்டரே அதிர்கின்றது.

இந்த படத்திற்கு ஏன் பாபி சிம்ஹா என்று தான் இவரை கமிட் செய்யும் போது ஒரு குரல் வந்தது. ஆனால், அவரும் கலக்கியுள்ளார் தன் கதாபாத்திரத்தில். இதை தவிர சூரி, கீர்த்தி சுரேஷ் காம்போ நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது, அதிலும் சூரி காமெடி முடியல ஹரி சார்.

த்ரிஷாவிற்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஸ் என்று காட்டும் போதே ரசிகர்களிடம் வருத்தம் தான் மிஞ்சி நிற்கின்றது. படத்தின் முதல் பாதி ஹரி படம் தானா என்பது போல் நகர்கின்றது, இடைவேளையில் ராம் சாமி திருநெல்வேலிக்குள் வரும் போது படம் சூடுப்பிடிக்கின்றது.

அதன் பிறகு கிளைமேக்ஸ் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லை, இடையில் கீர்த்தி, சூரியை மறந்தால். ஹரி சார் உங்களிடம் யாரோ வேகவேகமாக படம் எடுத்தால் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வருவார்கள் என்று சொல்லி ஏமாற்றியுள்ளார்கள் போல. இசை பெரும் சோதனை. ஒளிப்பதிவு கிளைமேக்ஸில் ராஜஸ்தான் மண் நம் மீது விழுகின்றது, அத்தனை ஸ்பீட்.

மொத்தத்தில் சாமி 1 உடன் ஒப்பிடும்போது இது சுமார்தான்

 

--தல தளபதி

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!