விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் முதல் பாடல் வெளியீடு (வீடியோ)

செப்டம்பர் 24, 2018 886

விஜய் நடிக்கும் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிம்டாங்காரன்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

விஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். இது ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் இணையும் 4-வது படம். படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான சிம்டாங்காரன் என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

பாடல் வீடியோ

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...