நித்யானந்தாவைப் போல் நடிகை பிரியா பவானி சங்கர்!

செப்டம்பர் 25, 2018 860

சென்னை (25 செப் 2018): நித்யானந்தாவைப் போல் டப் ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சின்னத்திரையில் தோன்றி வெள்ளிதிரையில் கால்பதித்த நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருப்பவர்.

“மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தொடந்து கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் முக்கிய வேடம் ஏற்றார்.

சமீபகாலமாக எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகமல் இருக்கும் இவர் தற்போது டப்ஸ்மாஸ் வீடியோக்களில் பிஸியாகியுள்ளார். இந்நிலையில் அவர் ஆன்மீகவாதி நித்யானந்தாவை கலாய்த்து டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த டப்ஸ்மாஷ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் நித்யானந்தா பேசிய மிக பிரபலமான டயலாக் ஒன்றை பிரியா டப்ஸ்மாஷ் செய்துள்ளார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...