என்ன கமல் ஹாசன் நீங்க நினைத்தது நடக்கவில்லையா?

செப்டம்பர் 26, 2018 772

சென்னை (26 செப் 2018): திரைப்படங்களில் கமலின் திட்டம் நிறைவேறாததால் பழைய நிலைக்கு களமிறங்கவுள்ளார் நடிகர் கமல்.

முஸ்லிம்களை குற்றவாளிகளாக சித்தரித்து பல திரைப்படங்களை எடுத்த கமல் ஹாசன் விஸ்வரூபம் முதல் பாகம் பட வெளியீட்டின் போது முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தது அவருக்கு சாதகமானது. அதனால் அந்த படம் வெற்றி பெற்றது. அதையே மூலதனமாக்கி இரண்டாவது பாகத்தையும் வெளியிடும் முன்பு டீசரில் மீண்டும் முஸ்லிம்களை சீண்டினார். ஆனால் முஸ்லிம்கள் அதனை கண்டு கொள்ளவில்லை படமும் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் - 2 படத்தில் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடக்க உள்ளது. இதனை அடுத்து தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர்.

இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இதில் போற்றி பாடடி பெண்ணே, வானம் தொட்டு போனா, அட புதியது பிறந்தது, இஞ்சி இடுப்பழகி ஆகிய இனிமையான பாடல்களும் இடம்பெற்று இருந்தன. கமல்ஹாசன் தற்போது டெலிவி‌ஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அடுத்த வாரம் அந்நிகழ்ச்சி முடிவடைகிறாது இந்தியன் 2 அதன்பிறகு. தேவர் மகன் - 2 படப்பிடிப்பையும் தொடங்குவார் என்றும் தேர்தலுக்கு முன்பு இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டு வருவார் என்றும் பேசப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...