அதிர்ச்சியில் செக்கச் சிவந்த வானம் படக்குழுவினர்!

செப்டம்பர் 27, 2018 782

சென்னை (27 செப் 2018): செக்கச் சிவந்த வானம் இணையத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது.

சென்னையின் செல்வாக்கான மாஃபியாவாக சேனாபதியும், அவருக்கு பின் அவர் அரியாசனத்தில் அமரப்போவது யாரென அவர் மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே `செக்கச் சிவந்த வானம் படத்தின் கதை. படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...