பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி!

October 02, 2018

திருவனந்தபுரம் (02 அக் 2018): மலையாள திரைப்பட இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் காலமானார்.

பாலா பாஸ்கர் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் திருச்சூரில் உள்ள ஒரு கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு காரில் குடும்பத்தினரோடு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார் பாலா. அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் அவரின் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழக்க, பாலாவும் அவரது மனைவியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாலா, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கேரள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!