இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

அக்டோபர் 02, 2018 417

சென்னை (02 அக் 2018): இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போனில் பேசிய மர்ம நபர், `செக்கச் சிவந்த வானம்' படத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய வசனத்திற்காக கண்டனம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

போனில் பேசியவர் யார், எங்கிருந்து போன் அழைப்பு வந்தது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...