தமிழ் ராக்கர்ஸில் சர்க்கார்!

அக்டோபர் 03, 2018 621

சென்னை (03 அக் 2018): தமிழ் ராக்கர்ஸில் சர்கார் இசைவெளியீட்டு விழாவின் முழு வீடியோவும் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்பதால் சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா ட்விட்டரில் இரவு வரை ட்ரெண்டிங்கில் இருந்தது.

இந்த இசைவெளியீட்டு விழா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் சர்கார் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் அதன் முழு வீடியோவையும் தமிழ்ராக்கர்ஸ் இணையதள பக்கத்தில் வெளியிட்டுவிட்டனர். திரைக்கு வரும் புதிய படங்களை மட்டுமே இதுவரை வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ், முதன்முறையாக இசைவெளியீட்டு விழாவின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொருமுறையும் தமிழ்ராக்கர்ஸ் இணைய பக்கத்தை தடைசெய்தாலும், வெவ்வேறு வழியில் தங்களது இணைய பக்கத்தைப் புதுப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...