கலைஞர்களின் சுதந்திரத்தில் தலையிடும் சர்க்கார் இயக்குநர்!

அக்டோபர் 05, 2018 538

சென்னை (05 அக் 2018): சர்கார் படத்தின் துணை நடிகர்கள், கலைஞர்கள் யாரும் தங்களின் அனுமதியின்றி பேட்டி கொடுக்கக் கூடாது என்று இயக்குநர் முருகதாஸ் எச்சரித்துள்ளார்.

கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ் - விஜய் கூட்டணியில் சர்கார் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இவர்களுடன் ராதாரவி, பழ.கருப்பையா வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அக்டோபர் 2 அன்று இசை வெளியீட்டில் நடிகர் விஜய் படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் புகழ்ந்து பேசியதோடு, இன்றைய அரசியல் சூழலையும் மறைமுகமாக சாடினார். விஜயின் பேச்சிற்கு வரவேற்பும் விமர்சனங்களும் இணைந்தே வந்தன.

படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள், கலைஞர்கள் பலர் இணைய ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் முருகதாஸ் படக் குழுவின் துணை நடிகர் யாரும் தங்கள் அனுமதியின்றி பேட்டி அளிக்கக் கூடாது என்றும் மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார். பலரின் கடின உழைப்பால் சர்கார் படம் உருவாகியுள்ளது; படத்தில் நடிக்கும் பல துணை நடிகர்கள் பேட்டியளித்து வருவது முறையற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...