இதுவும் திருட்டுக் கதையா? - ஏ.ஆர். முருகதாஸுக்கு நெருக்கடி!

அக்டோபர் 06, 2018 514

சென்னை (06 அக் 2018): சர்க்கார் திரைப்படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குநர் வருண் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'சர்க்கார்'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் உதவி இயக்குநர் வருண் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், சர்கார் படத்தின் கதை தன்னுடையது என புகார் அளித்தார்.

''செங்கோல்' என்று தலைப்பிடப்பட்ட ஒரு கதையை 2007 ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்ததாகவும், அதை திருடி ஏஆர் முருகதாஸ் சர்கார் படத்தை எடுத்திருப்பதாகவும் தனது புகாரில் கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து எழுத்தாளர் சங்கத்தில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதே போன்று கத்தி திரைப்படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டார் என அறம் பட இயக்குநர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...