நடிகர் மன்சூர் அலிகான் மனைவிகள் இருவரிடையே மோதல்!

அக்டோபர் 09, 2018 783

சென்னை (09 அக் 2018): நடிகர் மன்சூர் அலிகானின் இரண்டு மனைவிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் வெளியான குலேபகாவலி, செக்கச்சிவந்த வானம் போன்றவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்திருந்தார்.

சமீபகாலமாக ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், சேலம்-சென்னை இடையிலான பசுமைவழிச் சாலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்தார். இருந்தும் தொடர்ந்து அரசின் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவிக்கும் 3 மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், காயம் அடைந்த மூன்றாவது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...