இளம் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து குறித்து பாலியல் புகார்!

அக்டோபர் 09, 2018 866

சென்னை (09 அக் 2018): இளம் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் ட்விட்டரில் கூறியிருப்பதாவது " எனக்கு 18 வயது இருக்கும். வைரமுத்து அவர்களுடன் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவர் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன்.

அப்பொழுது ஒரு நாள் பாடல் வரிகளை பற்றி விளக்கம் தந்துக் கொண்டிருந்தேன். திடீரென என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிட்டேன், என்று அவரது அனுபவத்தை பகிர்ந்திருந்தார்". இந்த விவகாரம் குறித்து பாடகி சின்மயி, தனது டிவிட்டர் பக்கத்தில் ரீ டிவிட் செய்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...