எனக்கும் அந்த பிரச்சனை இருந்தது - நடிகை அமலா பால் பகீர்!

அக்டோபர் 13, 2018 761

சென்னை (13 அக் 2018): பாலியல் துன்புறுத்தல் குறித்து எல்லா பெண்களும் பேச வேண்டும் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

பெண்கள், திரையுலக பிரபலங்கள் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். இதற்கு வைரமுத்து மறுப்பும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், #MeToo விவகாரம் குறித்து பலரும் தங்களின் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து நடிகை அமலா பால் #MeToo விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து வர கூறியுள்ளதாவது, சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் Metoo மிக முக்கியமானது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...