சசி என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? - பொங்கும் அமலாபால்!

அக்டோபர் 25, 2018 872

சென்னை (25 அக் 2018): இயக்குநர் சசி கணேசனுக்கு எதிராக நடிகை அமலா பால் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

MeToo பிரச்சாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இயக்குநர் சுசி கணேசன் மீதான கவிஞர் லீனா மணிமேகலையின் #metoo புகாருக்கு நடிகை அமலா பால் தற்போது ஆதரவு தெரிவித்து இருந்தார். இதுகுறித்து சற்றுமுன் ட்விட்டரில் அவர் ``சுசி கணேசனால் பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடு பட்டிருப்பார் என நான் அறிகிறேன்" என்று ஒரு பதிவிட்டிருந்தார். இதற்கு லீனா மணிமேகலை நன்றி தெரிவித்து அவருக்குப் பதில் அளித்திருந்தார், வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்தப் பதிவு இணையம் முழுவதும் பரவியது.

இந்த நிலையில், சுசி கணேசன் தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டியதாக மீண்டும் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். சமீபத்திய பதிவில் அவர் கூறியிருப்பதாவது, ``என் வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் தற்போது நடந்திருக்கிறது. சற்று முன்னர் இயக்குநர் சுசி கணேசனும், அவரின் மனைவி மஞ்சரியும் என்னைத் தொடர்புகொண்டார்கள். என்னுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்காக நான் அந்த அழைப்புக்குப் பதிலளித்தேன். அவர் மனைவிக்கு நான் விளக்கம் அளித்துக்கொண்டிருக்கும்போதே போனைப் பிடுங்கிய சுசி கணேசன் என்னை அசிங்கமாகத் திட்டத் தொடங்கினார். நடப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரின் மனைவி சிரிப்பது எனக்கு கேட்டது. பின்னர் இருவரும் என்னைத் தரக்குறைவாகப் பேசினார்கள். என்னைப் பயமுறுத்த நினைக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

சசி கணேசன் இயக்கிய திருட்டுப் பயலே இரண்டாம் பாகத்தில் அமலா பால் ஹீரோயினாக நடிந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...