சின்மயி அப்படி என்ன உடை அணிந்திருந்தார் - கலாய்த்த நெட்டிசன்கள்!

அக்டோபர் 29, 2018 1138

சென்னை (29 அக் 2018): பாடகி சின்மயி அணிந்திருந்த உடையை நெட்டிசன்கள் விமர்சித்த நிலையில் சின்மயி அதற்காக விளக்கம் அளித்துள்ளார்.

மீ டூ விவகாரம் தொடர்பாக பல பாலியல் தொல்லைகள் குறித்து பாடகி சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது இவர் கூறியுள்ள புகார்கள் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் சசிணேசன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலை மற்றும் சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது, சின்மயி அணிந்திருந்த உடையை வைத்து சிலர் அவரை விமர்சனம் செய்திருந்தனர். பாடகின்னா சேலைதான் கட்டி வர வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள சின்மயி “தமிழ் சமுதாயத்தில் உள்ள ஆண்கள் இதுபோன்ற மீம்ஸை உருவாக்கியுள்ளனர். கழுத்து வலிக்காக தோல்பட்டை பெல்ட்டை நான் அணிந்துள்ளேன். அது பிரா அல்ல” எனக் காட்டமாக கூறியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...