படுக்கைக்கு அழைத்த போலீஸ் - நடிகை யாஷிகா பரபரப்பு குற்றச் சாட்டு!

அக்டோபர் 30, 2018 765

சென்னை (30 அக் 2018): போலீஸ்காரர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று நடிகை யாஷிகா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

இருட்டு அரையில் முரட்டு குத்து படம் மூலம் பிரபலமானவர் யாஷிகா பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலம் ஆனார். இந்நிலையில், அவர் சமீபத்தில் எனது அப்பா வயதுடைய இயக்குனர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்துகொண்டதாக் கூறியிருந்தார். தற்போது போலீஸ்காரர் ஒருவர் தன்னிடம் தகாத முரையில் பேசியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து போலீஸ்காரர் ஒருவர் மீது குற்றச் சாட்டு வைத்துள்ளார்.

ஒரு முறை நான் என் நண்பர்களுடன், சாலையில் நின்றுக்கொண்டிருந்த போது போலீஸ்காரர் ஒருவர் வந்து உன் ரேட் என்னவென என்னிடம் கேட்டார். இதை கண்டு ஆத்திரமடைந்த என் நண்பர் போலீஸாரை அடித்து பிரச்சனை ஆனது. பின்னர் இது குறித்து நான் போலீஸில் புகார் அளிக்க சென்ற போது அவர்கள் இதை கண்டுக்கொள்ளவில்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் அவர்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை மீடூ மூலம் வெளிப்படுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...