ரஜினி பட நடிகைக்கு எதிராக பிரபல மாடல் பாலியல் புகார்!

நவம்பர் 01, 2018 669

சென்னை (01 நவ 2018): ரஜினியின் 2.0 திரைப்பட நடிகை மாயா கிருஷ்ணன் மீது பிரபல மாடல் அனன்யா ராம்பிரசாத் என்பவர் metoo புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். இதையடுத்து, #MeToo மூலம் நடிகர் அர்ஜூன், தியாகராஜன் ஆகியோர் மீது நடிகைகள் புகார் தெரிவித்துள்ள விவகாரம், திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், துருவநட்சத்திரம், மற்றும் 2.0 போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை மாயா கிருஷ்ணன் மீது, மாடலிங் துறையைச் சேர்ந்த அனன்யா ராம்பிரசாத் என்பவர், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அனன்யா ராம்பிரசாத் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். "2016 ஆம் ஆண்டில் தனக்கு 18 வயதில் அறிமுகமான மாயா, தன்னை முழுவதும் அவரது கன்ட்ரோலில் கொண்டு வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாயா கிருஷ்ணன் என்னுடன் மட்டும் தான் பழக வேண்டும், நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என, என் வாழ்க்கையின் முக்கியமான எல்லா முடிவுகளையும் அவரே எடுத்த் வந்தார் எனவும் கூறியுள்ளார்.

மாயா தனியாக வசித்து வந்தார், வேலைக்காரணமாக அவர் வீட்டில் நான் தங்க நேர்ந்த சமயத்தில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்" அவருக்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவர் அவரது முகநூல் பக்கத்தில் பெரிய கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.

அனன்யா வெளியிட்ட இந்த புகாருக்கு முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார் மாயா கிருஷ்ணன்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...