ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த கமல்!

நவம்பர் 01, 2018 630

சென்னை (01 நவ 2018): ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிக்க மறுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் வேடம் மிகவும் முக்கிய வேடமாகும். அதனால் இதில் நடிக்க வைக்க முதலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டை அணுகியதாகவும்,. அர்னால்டும் ஆர்வமாக இருந்தார்.ஆனால் ஹாலிவுட் நடிகருக்கும், இந்திய சினிமாவுக்கும் இடையேயான ஒப்பந்தங்களில் சில சிக்கல்கள் இருந்ததால் அது நிறைவேறாமல் போனது.

அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலை அணுகினார்களாம் .ஆனால், அவர் சங்கரிடம் அதற்கு மறுத்த கமல், இந்தியன் 2 நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் இருப்பதாக சொல்லிவிடவே அக்‌‌ஷய் குமாரிடம் சென்று இருக்கிறார்கள்.

இந்த வேடம் ரஜினியுடன் மோதினாலும் வில்லன் வேடமாக இருக்காது. அந்த மோதலிலும் ஒரு நியாயம் இருக்கும் என்கிறார் இயக்குனர் சங்கர் .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...