தப்பு செய்யவில்லை என வைரமுத்து நிரூபிப்பாரா? - இன்னொரு பாடகி பகீர் புகார்!

நவம்பர் 02, 2018 773

சென்னை (02 நவ 2018): வைரமுத்துவால் பாலியல் ரீதியாக பாதிக்கப் பட்டதாக இன்னொரு பாடகி வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நான் வைரமுத்துவால் பாலியல் ரீதியாக பாதிக்கப் பட்டேன் ஆனால் நான் அதனை வெளியில் சொல்லாததற்கு காரணம் வைரமுத்துவால் மிரட்டப் பட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சம்பவத்தை நான் வெளியில் சொல்லியிருந்தால் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றிருக்கக் கூடும் அதனால் அதனை வெளியில் சொல்லாமல் விட்டுவிட்டேன். திறமை இருந்தும் பெரிய பாடகியாக வலம் வராததற்கு வைரமுத்து போன்றவர்கள்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வைரமுத்து மட்டுமல்ல பலர் சினிமா துறையில் இதுபோன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். ஆனால் வைரமுத்து மிரட்டல் அளவுக்கு செல்வார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடரும் வைரமுத்து மீதான பாலியல் புகார்கள் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...