96 திரைப்படத்தை திரையிட நடிகை திரிஷா எதிர்ப்பு!

நவம்பர் 03, 2018 534

சென்னை (03 நவ 2018): 96 திரைப்படத்தை தீபாவளி அன்று சன் டிவியில் திரையிட நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடித்து ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான திரைப்படம் 96.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தை சன் டிவியில் தீபாவளி அன்று ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதற்கு நடிகை திரிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு திரையிட வேண்டி சன் டிவியை திரிஷா கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...