வடநாட்டு ஊடகங்களை உயர்த்தி தமிழ் ஊடகங்களை விளாசிய சின்மயி!

நவம்பர் 05, 2018 622

சென்னை (05 நவ 2018): தமிழ் ஊடகங்களை தரக்குறைவாக பாடகி சின்மயி விமர்சித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி MeToo மூலம் பாலியல் குற்றச் சாட்டு வைத்தார். இது பெரும் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவரது குற்றச்சாட்டை தமிழ் ஊடகங்கள் முதலில் வெளியில் கொண்டு சென்றன.

இந்நிலையில் இன்று ட்விட்டர் பதிவொன்றில் தமிழ் ஊடகங்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார் சின்மயி, அதில், "என்னுடைய பிரச்சினையை டெல்லி மற்றும் மும்பை மீடியாக்கள் கையில் எடுத்ததால் மட்டுமே தமிழகத்தில் அது பற்றி பேசப்பட்டது. இதனால் அந்த மீடியாக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இல்லையென்றால் இங்கிருக்கும் சிலர் இப்பிரச்சினையை ஒன்றும் இல்லாமல் செய்திருப்பார்கள். தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் எல்லாமே லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் செய்தி போடுகிறார்கள். இங்கு யாரும் உண்மையைப் பேசுவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இது ஊடகங்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...