சர்க்கார் இணையத்தில் ஹெச் டியில் வரும் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!

நவம்பர் 05, 2018 1168

சென்னை (05 நவ 2018): சர்க்கார் திரைப்படம் இணையத்தில் ஹெச்.டியில் வெளியாகும் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலடியாக தமிழ்நாடு திரையரங்க சங்கத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் சங்கம் அறிவுறுத்தி இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது
அதில் கூறப்பட்டுள்ளதாவது.

யாராவது திருட்டுத்தனமாக படத்தை மொபைல் போனிலோ காமிராவிலோ படம் எடுத்தால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இதனையடுத்து யாராவது போனில் படம் எடுக்கிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டுமெனெ திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக நபர்களை நியமிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளது.

ஏற்கனவே சர்கார் திரைப்படம் இணையதளங்களில் வெளியிடக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சில நாட்களுக்கு முன் உத்தரட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...