எப்படி இருந்த நடிகை இப்படி ஆகிவிட்டார்!

நவம்பர் 05, 2018 801

மும்பை (05 நவ 2018): அழகுச் சிலையான நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோய் சிகிச்சை காரணமாக தலை முடி முழுவதையும் இழந்து புதிய தோற்றத்தில் உள்ளார்.

பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் கோடி பெல்லை திருமணம் செய்துகொண்டசோனாலி சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார்.பின் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவில் தங்கி கீமோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சிகிச்சையின் போது அவர் தன் முடியை இழந்துள்ளார்.

அந்த படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முடி இழந்ததால் தலையில் விக் வைத்துள்ள படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த கீமோ தெரபி சிகிச்சையால் தன் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் படிக்க முடியாமல் போனதாகவும் மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனை நல்ல படியாக விலகி விட்டதையும் கூறியிருக்கிறார்.

சோனாலி பிந்த்ரே தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...