சர்க்கார் - சினிமா விமர்சனம்!

நவம்பர் 06, 2018 1841

விஜய் முருகதாஸ் கூட்டணி என்பதை தாண்டி கதை திருட்டு என்கிற சர்ச்சையில் சிக்கி வெளியாகியிருக்கும் படம் சர்க்கார்.

ஒரு டாப் கம்பெனியின் CEOவாக இருக்கும் சுந்தர்(விஜய்) இந்தியா வருகிறார். இந்தியாவில் இருக்கும் மற்ற கம்பெனிகளே அவர் என்ன செய்ய போகிறார் என்று பயன்படுகின்றன. ஆனால் அவர் ஓட்டு போட தான் இங்கு வந்தார் என தெரிந்து நிம்மதி அடைகின்றன.

வாக்குச்சாவடி செல்லும் போது விஜய்யின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என தெரியவர நீதிமன்றத்திற்கு செல்கிறார் விஜய். தன் ஒரு ஓட்டை பதிவு செய்தபின் தான் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவேண்டும் என வழக்கு போட்டு அதில் வெற்றியும் பெறுகிறார்.

அதன் பின் ராதாரவி ஒரு சந்திப்பில் விஜய்யை மிக மோசமாக விமர்சிக்க, கோபமான விஜய் மீடியாவை தூண்டிவிட்டு, கள்ள ஓட்டுக்கு தங்கள் வாக்கை பறிகொடுத்த லட்சக் கணக்கானவர்களை நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்து, அதையே காரணம் காட்டி மறுத்தேர்தல் வேண்டும் என கேட்கிறார்.

கடைசி நிமிடத்தில் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்ட கோபத்தில் அவரை கொல்ல முயற்சி நடக்க, நானே அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறேன் என கிளம்புகிறார்.

அதில் வரும் தடைகளை எப்படி சமாளித்தார் என்பது தான் மீதி “சர்கார்”.

“கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும், நான் கேள்வி கேட்கிறேன்?” என தைரியமாக தமிழ்நாட்டில் உள்ள சமகால பிரச்சனைகளை பேசியுள்ள விஜய்யும், படத்தின் திரைக்கதையும் தான் சர்கார் படத்தின் மிகப்பெரிய பிளஸ். மேலும் வில்லனாக பழ. கருப்பையா, ராதாரவி நடிப்பு மிரட்டல்.

பழ. கருப்பையாவின் மகளாக வரும் வரலக்ஷ்மி வார்தையிலேயே மிரட்டுகிறார், நிஜ வில்லன் அவர்தான். “அவன் கார்ப்பரேட் கிரிமினல், நான் கருவுளையே கிரிமினல்” போன்ற அவரது பன்ச் செம.

கீர்த்தி சுரேஷ் எதற்கு இருக்கிறார் என்று தெரியாத அளவுக்கு ஒரு கதாபாத்திரம். ஒரு சில காட்சிகளில் வரும் யோகிபாபுவும் பெரிதாக ஜொலிக்கவில்லை.

சண்டை காட்சிகள் வடிவமைத்தது ராம்-லக்ஷ்மன் என்பதால், அதில் தெலுங்கு சினிமா போல கொஞ்சம் ஓவர்டோஸ். விஜய் அதிலும் தெறிக்கவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை பின்னணியில் சரவெடி பாடல்கள் மெர்சல் அளவுக்கு இல்லை. சிம்டாங் காரன், ஒ எம் ஜி பொண்ணு பாடல்கள் ஓரளவுக்கே கேட்க முடிகிறது.

விஜய் ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்து இந்த சர்க்கார்.

-தல தளபதி

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...