வெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு!

November 06, 2018

சென்னை (06 நவ 2018): சர்கார் படம் வெளியான சில மணி நேரங்களிலேய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்கார் படத்தை ஹெச்டி பிரிண்டாக இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. தமிழ் ராக்கர்ஸின் இந்த சவாலை முறியடிப்போம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட்டிருக்கின்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக படத்தை இணையத்தில் வெளியிட நிரந்தரத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!