படப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை!

நவம்பர் 08, 2018 638

பெங்களூரு (08 நவ 2018): பிரபல நடிகை படப்பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்டதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவர் கொண்டா நடிப்பில் டேக்ஸி வாலா என்ற படம் வரும் நவம்பர் 16 ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஹீரோயின் பிரியங்கா ஜவால்கர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்டார். அப்போது அந்த படத்தை பற்றி பேசிய அவர், இப்படத்தின் ஒரு காட்சிக்காகவே தான் குடித்தாகவும், அதிலும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே குடித்துவிட்டு போதையை படப்பிடிப்பு முடியும் வரை தாக்கு பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குடிபோதையில் தேவையற்ற முறையில் சிரிக்கவும் வேண்டுமாம். இதற்காக மிகவும் சிரமப்பட்டேன் என்று அந்த நடிகை கூறியுள்ளார்.

மீடூ சர்ச்சையில் பலரையும் சிக்க வைக்கும் நடிகைகள் அவர்கள் செய்யும் தவறுகளை வெளி கொண்டு வருவதில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...