வலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து!

November 08, 2018

மதுரை (08 நவ 2018): அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரையில் 3 திரையரங்குகளில் சர்க்கார் காட்சிகள் ரத்து செய்யப் பட்டன.

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் சர்ச்சைகளுடன் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், படத்துக்கு எதிராக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் வெளியான் தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவையிலும் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனால், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காசி தியேட்டரிலும் அதிமுகவினர் குவிந்து, படத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!