கமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்!

நவம்பர் 08, 2018 888

மும்பை (08 நவ 2018): நடிகர் கமல் ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசனின் ஆபாச படங்கள் இணையத்தில் லீக் ஆனது குறித்து அக்‌ஷரா ஹாசன் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் மர்ம நபரால் சமீபத்தில் லீக் செய்யப்பட்டது. இதனால் அக்‌ஷரா மட்டுமின்றி பலரும் அதிர்ச்சியடைந்தனர். அண்மையில் வெளியான இந்த புகைப்படங்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனை தொடர்ந்து அக்‌ஷரா, இணையத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படத்தின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்டவை என்றும், துரதிருஷ்ட விதமாக இணையத்தில் வெளியாகி உள்ளதாக அவா் விளக்கம் அளித்திருந்தாா். மேலும் இவை அனைத்தும் ஒரு படப்பின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்பட்டவை என்றும், மீண்டும் இது போன்ற படங்கள் எடுக்கும் வாய்ப்பு நேர்ந்தால், அதை எடுக்க கட்டாயம் தயங்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த அந்தரங்க புகைப்படங்களை யார் வெளியிட்டிருப்பார் என்பதை கண்டறியவும், இந்த குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அக்‌ஷரா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...