சன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு!

நவம்பர் 09, 2018 1116

சென்னை (09 நவ 2018): இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப் பட்டதாக நேற்று இரவு செய்தி வெளியானது. ஆனால் அதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.

விஜய் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியன்று 'சர்கார் ' திரைப்படம்' வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே கதை தொடர்பாகப் பல சர்ச்சைகளை சந்தித்து பின் சுமுகமாக திரைப்படம் வெளியானது. அரசியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சிவி சண்முகம் உட்படப் பலரும் இந்தப் படத்திற்கு பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், இலவசங்கள் குறித்தும் காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அதை நீக்கக் கோரியும் பலரும் தெரிவித்து வருகின்றனர். இன்று பல இடங்களில் சர்கார் படத்திற்காக வைக்கப்ட்ட பேனர்களையும் அ.தி.மு.க வினர் கிழித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சன் டிவி ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் முருகதாஸை கைது செய்ய போலீஸ் விரைந்துள்ளது என்று பதிவிட்டிருந்தது. ஆனால் அதனை முருகதாஸ் மறுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...