முருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி!

நவம்பர் 10, 2018 651

சென்னை (10 நவ 2018): சர்கார் படத்தில் தமிழக அரசை பற்றி சர்ச்சையான காட்சிகள் இடம் பெற்றதால் படத்தின் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் ஆளும் தரப்பிற்கு எதிராக கருத்துகள் பெரும் எதிர்ப்பை சந்தித்தன. இதனால் எழுந்த போராட்டங்கள் சென்சார் மூலம் சில காட்சிகளை நீக்கப்பட்டது. பிறகு சர்ச்சைகள் அடங்கி இருக்கிறது. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஆளும் தரப்பு இன்னும் கோபத்தில் இருக்கிறது. காரணம் ரஜினி.

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்காக தனது மக்கள் மன்றத்தை வலுவாகக் கட்டமைத்து வருகிறார். அவரது அரசியல் வருகைக்கு அரசியல் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.

சர்காரை தொடர்ந்து ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் ஒரு அரசியல் கதையை இயக்க இருக்கிறார். அந்த படத்தையும் சன் பிச்சர் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இதுவரை ரஜினி படங்களிலேயே இல்லாத அளவுக்கு அரசியல் பேசப்போகும் படமாக அமைய உள்ளது. ரஜினிக்கும் இந்தப்படம் அரசியல் ரீதியாக பெரும் பக்கபலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால் முருகதாஸை இப்போதே கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறது எடப்பாடி அரசு. மேலும் தக்க பாடத்தை முருகதாஸுக்கு புகட்டினால்,வர இருக்கும் ரஜினி படத்தில் அடக்கி வாசிப்பார் என்பதால் முருகதாஸ் மீது வழக்குப்போட்டு நள்ளிரவில் கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் அவருக்கு ஆதரவாக ரஜினி வெளிப்படையாக வந்து கருத்துக்களை தெரிவித்ததையும் ஆளும் கட்சியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆகவே ஏ.ஆர்.முருகதாஸுக்கு அடுத்தடுத்து சிக்கலை ஏற்படுத்தினால் மட்டுமே அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் கட்டுப்படுத்த முடியும் என எடப்பாடி அரசு முடிவுக்கு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...