ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி!

நவம்பர் 11, 2018 746

சென்னை (11 நவ 2018): இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்க்கார் திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் முருகதாஸ் அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டார். அவர் அடுத்து ரஜினியை வைத்து இன்னொரு அரசியல் படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த திரைப்படம் தேசிய அரசியலை மையமாக கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...