லவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் பாஜக

நவம்பர் 11, 2018 779

மும்பை (11 நவ 2018): கேதர்நாத் என்ற இந்தி படத்திற்கு தடை கோரி பாஜக சென்சார் போர்டுக்கு கடிதம் எழுதியுள்ளது.

‘கேதர்நாத்' என்ற இந்தி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. முஸ்லிம் ஆணுக்கும், இந்துப் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்வது போன்ற கருவைக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக-வின் அஜேந்திர அஜய், சென்சார் போர்டுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கேதர்நாத்தில் நடந்த மிகப் பெரிய பேரழிவை சித்தரிக்கும் விதத்தில் ‘கேதர்நாத்' திரைப்படம் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் இயக்குநர் அபிஷேக் கபூர், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் காட்சிகளை அமைத்துள்ளார்.

மேலும் லவ் ஜிஹாதை ஊக்குவிக்கும் வகையில் முஸ்லிம் ஆணுக்கும் இந்துப் பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்வது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தில் கதாநாயகியாக முஸ்லிம் பெண் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியானால் பல இடங்களில் போராட்டங்கள் வெடிக்கும். எனவே, சென்சார் போர்டு படத்துக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...