மது போதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கிய பிரபல நடிகை!

நவம்பர் 25, 2018 666

சென்னை (25 நவ 2018): நடிகை காயத்ரி ரகுராம் மது போதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். ஏற்கனவே சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை திரு.வி.க.பாலம் பகுதியில் நேற்றிரவு மதுபோதையில் கார் ஓட்டியதாக நடிகை காயத்ரி ரகுராமை போலீசார் பிடித்து விசாரணை செய்ததாகவும், அதன் பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் அவருக்கு ரூ3500 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.

பிரபல செய்தி தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...