போயும் போயும் இந்த படத்துக்குத்தானா இவ்வளவு பரபரப்பு?

நவம்பர் 29, 2018 653

“போயும் போயும் இந்தப் படத்துக்குத்தானா இவ்வளவு பரபரத்தோம்,” என்று கேட்கிற மட்டத்தில்தான் ‘சர்கார்’ இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஒரே கோணத்தில் அதற்குத் தடைபோடும் முயற்சிகளை எதிர்த்தோம். கதைத்திருட்டு விவகாரம் கொஞ்சநஞ்ச மரியாதையையும் விலக்கியது.

அப்போதாவது, வெளியாகிவிட்ட ஒரு படத்தில் வெளிப்படுத்தப்பட்ட கருத்தை முடக்குவதற்கு ஆட்சியாளர்களும் ஆளுங்கட்சியினரும் எடுத்த நடவடிக்கையாக வந்தது. இப்போதோ, இனிமேல் படம் எடுப்பதற்கு முன்பே, மனதுக்குள் கருத்தே உருவாகக்கூடாது என்கிற அளவுக்குப் போகிறார்கள்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது வீட்டுக்குப் போலீஸ் வந்துபோனதைத் தொடர்ந்து முன்பிணை கோரியிருக்கிறார். நீதிமன்ற விசாரணையின்போது அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர், ஏற்கெனவே எடுத்த படத்தின் காட்சிகளுக்காக இயக்குநர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றதோடு, இனிமேல் எடுக்கும் படங்களில் அரசையும் அரசுத் திட்டங்களையும் விமர்சிக்கிற காட்சிகளை வைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று வேறு நிபந்தனை விதித்தாராமே! எல்லா சினிமா படைப்பாளிகளுக்குமான எச்சரிக்கையா இது?

ஆனானப்பட்ட எம்ஜிஆர் ஆட்சியிலேயே, ஒரு சினிமா வந்தபோது (தற்போதைய படத்தின் ஹீரோ நடிகரது அப்பா இயக்கிய அந்தப் படமும் “இதுக்கா இவ்வளவு பரபரத்தோம்” என்கிற மட்டம்தான்) சட்டமன்றத்தையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ, அமைச்சர்களையோ, முதலமைச்சரையோ, எஸ்பி லெவலுக்கு மேற்பட்ட அதிகாரிகளையோ விமர்சிக்கிற படம் எடுத்தால் ஏழாண்டு ஜெயில் என்று ஒரு சட்டம் கொண்டுவர முயன்றார்கள். தமிழக மக்கள் அந்த சூப்பர் சினிமா தணிக்கைச் சட்டமுன்வரைவைக் குப்பைத் தொட்டியில் போட வைத்தார்கள்.

இப்போதும் மக்கள் இருக்கிறார்கள்.
குப்பைத்தொட்டியும் இருக்கிறது.

-குமரேசன்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...