தடையையும் மீறி இணையத்தில் வெளியானது 2.O திரைப்படம்!

நவம்பர் 29, 2018 717

சென்னை (29 நவ 2018): ரஜினி நடிப்பில் இன்று வெளியான 2.O திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

2.O திரைப்படம் கடந்த மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, இன்றுதான் திரையரங்குகளில் வெளியாகிறது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட படம், இந்திய சினிமாவில் அதிக தொகை செலவிட்ட படமாகியுள்ளது. இந்த படத்தில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் இன்று 2.o படம் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் எந்தவித டோரண்ட் இணையதளத்திலும் ரிலீஸாக கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தடை வாங்கியுள்ளது.

இந்நிலையில், இணையதளத்தில் 2.0 படத்தினை வெளியுட்டுள்ளது. சுமார் கிட்டத்தட்ட 12,000 இணையதளத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...