சாதி சாக்கடையில் போய் கண்டு பிடித்துக்கோங்கடா - விளாசிய ரித்விகா!

நவம்பர் 30, 2018 792

சென்னை (30 நவ 2018): நடிகை ரித்விகாவின் சாதி குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு தனது ஒரு ட்விட்டால் காட்டமாக பதிலளித்துள்ளார்.

நடிகையான ரித்விகா, பிக்பாஸ் டைட்டில் வின்னராக பெரும் புகழ் பெற்றார். இந்நிலையில் அவர் சாதி குறித்தும் அவர் இந்த சாதி என்பதால்தான் டைட்டில் வின்னரானார். என்ற விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ட்விட்டரில், ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை. நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா.." என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...