இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், “தமிழ்நாட்டில் கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை அறிந்து சோகமடைந்தேன். அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். நம்மால் முடிந்த ஏதேனும் வழியில் பங்காற்ற முயற்சிப்போம்,” என தெரிவித்துள்ளார்.
அமீர்கானின் இந்த கருத்துக்கு நடிகரும் மக்கள் மய்யம் தலைவருமான கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.