ராதா ரவி குறித்து உண்மையை போட்டுடைத்த சின்மயி!

டிசம்பர் 01, 2018 1177

சென்னை (01 டிச 2018): நடிகர் ராதாரவி குறித்து ஒரு உண்மையை வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி.

மிடூ மூலம் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தர் என்று பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சின்மயி. ஆனால் சின்மயியை நடிகர் ராதாரவி கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் ராதாரவிக்கு மலேசியா டத்தோ என்ற பட்டத்தை வழங்கியதாக சொல்லப் படுவது பொய் என்று தற்போது அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஷாருக்கானுக்கும், ஜாக்கி ஜானுக்கு மட்டுமே அந்த பட்டம் மலேசியாவால் வழங்கப் பட்டது என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து விலக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...