ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

டிசம்பர் 08, 2018 681

சென்னை (08 டிச 2018): பேட்ட பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் இருப்பதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரஜினி பெரும்பாலும் பல வருடங்கள் காத்திருந்து படம் நடிப்பார் இதனால் ரஜினியின் படங்களுக்கு நல்ல மவுசு இருந்தது. ஆனால் 2018 ல் மட்டும் காலா, 2.O என இரண்டு படங்கள் வெளியாகி விட்டன. இதனை அடுத்து பொங்கலுக்கு பேட்ட படமும் வெளியாகும் என அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்கள் வெளியாவதில் ரஜினி விரும்பவில்லை என தெரிகிறது. இதனால் பேட்ட படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் சித்திரை மாதம் 14 ஆம் தேதி வெளியிட ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...