ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் டீசர் - வீடியோ

டிசம்பர் 12, 2018 789

சென்னை (12 டிச 2018): நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை ஒட்டி, பேட்ட படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த், தனது 69-வது வயதில் இன்று அடியெடுத்து வைத்துள்ளார். அரசியலுக்கு வருவேன் என்று அவர் தெரிவித்த பின், கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும். இதையொட்டி ரசிகர்கள் பல்வேறு பகுதிகளில் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

வீடியோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், த்ரிஷா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. அண்மையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், இன்று பகல் 11 மணியளவில், 'பேட்ட' படத்தின் டீசர்  வெளியிடப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...