பிரபல நடிகை அவரது அப்பார்ட்மெண்டில் வைத்து திடீர் கைது!

டிசம்பர் 17, 2018 845

கொச்சி (17 டிச 2018): போதைப் பொருள் வைத்திருந்ததாக பிரபல மலையாள நடிகை அஸ்வதி கைது செய்யப் பட்டுள்ளார்.

சினிமா டிவி சீரியல்களில் நடித்து வரும் அஸ்வதி கொச்சியில் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்கியிருந்தார். அவரது வீட்டில் போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் எம்டிஎம்ஏ என்ற போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இதனை அடுத்து நடிகை அஸ்வதியும் அவரது கார் டிரைவரும் கைது செய்யப் பட்டு போலீசாரால் விசாரணை செய்யப் பட்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...