சீதக்காதி - சினிமா விமர்சனம்!

டிசம்பர் 18, 2018 1055

விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுபவர். சின்ன கேரக்டரில் வந்தாலும் பேச வைக்கும் வகையில் நடிப்பில் கொடிகட்டி பறக்கிறவர். அவர் வயதான கேரக்டரில் நடித்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கியுள்ள படம்தான் சீதக்காதி.

'அய்யா' ஆதிமூலம் (விஜய் சேதுபதி) சிறு வயதில் இருந்தே நாடகம் மீது ஆர்வம் கொண்டு அதிலேயே மொத்த வாழ்க்கையையும் செலவளிக்கிறார். ஒரே அரங்கில் தொடர்ந்து 50 வருடங்களாக தொடர்ந்து தினமும் நாடகம் போட்டு வரும் அளவுக்கு நாடகம் மீது வெறி கொண்டவர்.

முதல் அரை மணி நேரத்திற்கு மட்டுமே வந்தாலும் தன் நடிப்பு திறமையை முழுமையாக பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி. அச்சு அசலாக 70 வயதுக்கு மேற்பட்டவர் போல தோற்றம், பாவங்கள் - அனைத்திலும் ஈர்க்கிறார். 10 நிமிடங்கள் சிங்கில் ஷாட்டில் அவுரங்கசிப் நாடகத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

ஒரு கற்பனையான மெட்டா சினிமா கதையை எடுத்து தைரியமாக படமாக்கிய இயக்குனருக்கு பாராட்டுகள்.

வில்லன் கேரக்டரில் நடித்துள்ள சுனில் (நடிகர் வைபவ்வின் அண்ணன்), ராஜ்குமார் ஆகியோர் ஷூட்டிங்கின்போது செய்யும் எக்ஸ்பிரஷன் காமெடி உங்களை நிச்சயம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்.

ரம்யா நம்பீசன், காயத்ரி போன்ற மற்றவர்களுக்கு சில நிமிடங்கள் வந்து செல்லும் அளவுக்கு சிறிய கேரக்டர்ரோல்தான்.

படத்தின் நீளம்தான கொஞ்சம் அதிகம் மற்றபடி பார்த்து சிரிக்கலாம். 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...