பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு பளார் விட்ட நடிகை!

டிசம்பர் 19, 2018 546

அவுரங்காபாத் (19 டிச 2018): தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரசிகர் ஒருவரை நடு ரோட்டில் வைத்து அடித்து துவைத்துள்ளார் இந்தி நடிகை ஜரீன் கான்.

சல்மான் கான் நடித்த வீர் படம் மூலம் அறிமுகமானவர் ஜரீன் கான், தொடர்ந்து இந்தி சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் தமிழில் நகுல் நடித்த ‘நான் ராஜாவாக போகிறேன்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஜரீன் கான் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்காக மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்துக்கு சென்றார். அவர் வருவதை முன்பே அறிவித்து இருந்ததால் கடை முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

கடையை திறந்து வைத்த ஜரீன்கான் கடையின் முன்புறம் வந்து சில நிமிடங்கள் ரசிகர்களை பார்த்து கைகாட்டிவிட்டு காரில் ஏற முயன்றுள்ளார். அப்போது ரசிகர்கள் அவர்மீது பாய்ந்ததோடு தொட்டு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜரீன் கான் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களை பிடித்து தள்ளியதுடன், சிலரை அடித்துவிட்டார். நடிகை இந்த அளவுக்கு வேகத்துடன் தாக்கியதை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர்கள் மிரண்டுவிட்டனர். பாலியல் தொல்லை கொடுக்க முயன்றவர்களை அடித்துவிட்டு ஒரு வழியாக தனது காரில் ஏறி சென்றார் ஜரீன்கான்.

நடிகை ஜரீன் கானின் இந்த செயலை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...