ரஜினி தொடங்கும் புதிய டிவி சேனலுக்கு இதுதான் பெயர்!

டிசம்பர் 21, 2018 983

சென்னை (21 டிச 2018): நடிகர் ரஜினிகாந்த் , தனி டிவி சேனல் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றம் பெயரில் ரஜினியின் ஆங்கில கையெழுத்துடன் ஒரு ‘ஆட்சேபணையில்லா கடிதம்’ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி மற்றும் தலைவர் டிவி போன்ற பெயர்களைப் பயன்படுத்த ஆட்சேபணை இல்லை என்று ரஜினி தெரிவித்துள்ளதாகக் காணப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து ரஜினி தரப்பிலோ, மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகி சுதாகரோ எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இதுவரை இது குறித்து கடிதம் ஒன்றே வெளியாகியுள்ளது. அவ்வாறு ரஜினி தொடங்கவுள்ள டிவிக்கு தலைவர் டிவி, அல்லது சூப்பர் ஸ்டார் டிவி என பெயரிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதே போல் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக சேனலின் லோகோ டிசைன்களும் வெளியாகியிருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...