பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மரணம்!

டிசம்பர் 27, 2018 667

சென்னை (27 டிச 2018): பிரபல தமிழ் குணச்சித்திர நடிகர் சீனு மோகன் உயிரிழந்தார்.

கிரேஸி மோகனின் நாடகக் குழுவில் 1979-ம் ஆண்டு முதல் இணைந்து நடித்த சீனு மோகன் அந்த நாடகக் குழுவில் முக்கிய நடிகராக பணியாற்றியவர். சுமார் 3000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து வருஷம் பதினாறு படத்தில் நடிதத அவர், இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி, தளபதி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, தனுஷூடன் வட சென்னை, நயன் தாராவின் கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் சீனு மோகன் ‘மெர்சல்’ படத்தில் நடிகர் விஜய்யுடனும் இணைந்து நடித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேடை நாடகங்கள் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சீனு மோகனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது உடல் அண்ணாநகரில் உள்ள மின் மயானத்தில் நாளை மறுதினம் தகனம் செய்யப்படவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...